2025 மே 12, திங்கட்கிழமை

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நெல் வேளாண்மைக் காணி இடாப்பு மீளாய்வுப்பணி

Suganthini Ratnam   / 2016 பெப்ரவரி 18 , மு.ப. 05:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் சுமார் 25 வருடங்களின் பின்னர் நெல் வேளாண்மைக் காணி இடாப்பு மீளாய்வு செய்யும் பணி தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த வாரம் ஆரம்பிக்கப்பட்ட இந்த மீளாய்வுப் பணி எதிர்வரும் மே மாதம் 30ஆம் திகதிவரை நடைபெறுமென விவசாய அமைச்சின் நிர்வாகத்திலுள்ள கமத்தொழில் இலாகாவினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

காணிகளின் சட்ட ரீதியான உரிமையாளரை அடையாளம் காணுதல், நெல் வேளாண்மைச் செய்கை பண்ணப்படும் காணியின் விஸ்தீரணத்தை உறுதிப்படுத்துவதே இதன் பிரதான நோக்கமெனத் தெரிவிக்கப்படுகிறது.

நாட்டின் ஏனைய பகுதியில் 2014ஆம் ஆண்டு நெல் வேளாண்மைச் செய்கைக்குரிய காணிகள் மீளாய்வு செய்யப்பட்டது. இருப்பினும், யுத்தம் இடம்பெற்றதன் காரணமாக வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இந்தப் பணி முன்னெடுக்கப்படவில்லை. இறுதியாக 1992ஆம் ஆண்டு முன்னெடுக்கப்பட்டதாகக் கூறப்படுகின்றது.

வடக்கு, கிழக்கு மாகாணங்களை பொறுத்தவரையில் யுத்தம் காரணமாக காணி உரிமை தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு இதன் மூலம் தீர்வு காண முடியுமென்று தான் கருதுவதாக மட்டக்களப்பு மாவட்ட கமத்தொழில் அபிவிருத்தித் திணைக்கள பிரதி ஆணையாளர் என்.சிவலிங்கம் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X