2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

10 இலட்சம் ரூபாய் செலவில் மண்டபம் திறப்பு

Kogilavani   / 2014 மே 13 , மு.ப. 06:13 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


காத்தான்குடி அல்மனார் நிறுவனத்தில் 10 இலட்சம் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள சட்டத்தரணி அப்துல் ஜவாத் மண்டபம் திங்கட்கிழமை இரவு திறந்து வைக்கப்பட்டது.

காத்தான்குடி அல்மனார் நிறுவனத்தின் ஏற்பாட்டில் அதன் செயலாளர் அஸ்ஸெய்க் ஏ.எல்.எம்.மும்தாஸ் மதனீ தலைமையில் நடைபெற்ற இந்த வைபவத்தில் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாறூக், காத்தான்குடி ஜாமியதுல் பலாஹ் அறபுக்கல்லூரியின் அதிபர் அப்துல்லாஹ் றஹ்மானி ஹஸரத் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது, காத்தான்குடியில் 55 வருடங்களுக்கு மேலாக கல்வி, மற்றும் கலாசார சமூகப்பணி ஆற்றி வரும் காத்தான்குடி ஜாமியதுல் பலாஹ் அறபுக்கல்லூரியின் அதிபர் அப்துல்லாஹ் றஹ்மானி ஹஸரத், காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் பிரதி தலைவர் சட்டத்தரணி ஏ.எல்.அப்தல் ஜவாத் ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X