Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 02, வெள்ளிக்கிழமை
Freelancer / 2023 ஏப்ரல் 11 , மு.ப. 09:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எல்.எம்.ஷினாஸ்
2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மருதமுனை மக்களுக்கு பிரதேசத்தின் மேட்டுவட்டை பகுதியில் கட்டப்பட்ட 179 வீடுகளில் இதுவரை பகிர்ந்தளிக்கப் படாமல் கிடந்த 82 வீடுகளில் 67 வீடுகளை சுமார் 18 ஆண்டுகளுக்கு பின்னர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் கல்முனை பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு தலைவருமான எஸ்.எம்.எம். முஷாரப் இன் முயற்சியால் நேற்று வழங்கி வைக்கப்பட்டது.
கல்முனை பிரதேச செயலாளர் ஜே.லியாக்கத் அலி தலைமையில் பிரதேச செயலக கூட்ட மண்டபத்தில் வைத்து பயனாளிகளுக்கு குறித்த வீடுகள் கையளிக்கப்பட்டன.
கல்முனை பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டம் கடந்த மார்ச் மாதம் 16 திகதி பிரதேச செயலகத்தில் நடைபெற்றது. இதன் போது மருதமுனை பிரதேசத்தில் கடந்த 18 ஆண்டுகளாக சுனாமி வீடுகள் மக்களுக்கு வழங்கப்படாமல் உள்ளது. இதனால் பல்வேறு சமூகப் பிரச்சினைகளை பிரதேச மக்கள் எதிர்நோக்கி வருகின்றனர். இதற்கு என்ன தீர்வு எடுக்கப்பட்டுள்ளது ? என கூட்டத்தில் கலந்து கொண்ட மருதமுனையை சேர்ந்த ஊடகவியலாளர் கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்கு பதிலளித்து உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் முஷாரப்
எதிர்வரும் ஏப்ரல் மாதம் புது வருடத்திற்கு முதல் மீதமாக உள்ள வீடுகளை வழங்க தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்று தெரிவித்திருந்தார். இதற்கமைய குறுகிய காலத்திற்குள் குறித்த வீடுகள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. R
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
3 hours ago
4 hours ago