Editorial / 2023 மே 08 , பி.ப. 12:23 - 0 - {{hitsCtrl.values.hits}}

கனகராசா சரவணன்
மட்டக்களப்பு, கொக்குவில் பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசத்திலுள்ள சிறுவர் பராமரிப்பு சீர்திருத்த நிலையம் ஒன்றில் இருந்து 14,13 வயதுடைய இரு சிறுமிகள் இன்று திங்கட்கிழமை (08) அதிகாலையில் தப்பி ஓடியுள்ளதாக கொக்குவில் பொலிஸார் தெரிவித்தனர்.
மாவட்டத்தில் சிறுவர் திருமணம் மற்றும் பாலியல்துஷ்பிரயோம் மேற்கொள்ளப்பட்ட சிறுமிகளை சீர்திருத்துவதற்காக நீதிமன்றத்தினால் சிறுவர் பராமரிப்பு நிலையங்களுக்கு அனுப்பப்படும்.
இந்த நிலையில் நீதிமன்றினால் குறித்து சிறுவர் பராமரிப்புக்காக அனுப்பப்பட்ட வாழைச்சேனை பிரதேசத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமியும் ஏறாவூரைச் சேர்ந்த 13 வயது சிறுமியும் பராமரிக்கப்பட்டுவந்த நிலையில் சம்பவதினமான இன்று அதிகாலை 2.30 மணியளவில் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளதாக பாராமரிப்பு நிலையத்தினர் முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொக்குவில் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.
7 minute ago
20 minute ago
34 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
20 minute ago
34 minute ago