2026 ஏப்ரல் 10, வெள்ளிக்கிழமை

ஆலய பூசகர் மீது அசிற் தாக்குதல் நடத்தியவருக்கு பிணை

Suganthini Ratnam   / 2011 மார்ச் 24 , மு.ப. 07:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 (ரி.லோஹித்)

மட்டக்களப்பு, களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிலுள்ள எருவில் மாரியம்மன் ஆலய பூசகரான சாமித்தம்பி தாமோதரம்பிள்ளை என்பவர் மீது அசிற் வீசி தாக்குதல் நடத்தியவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைதுசெய்யப்பட்ட  சந்தேக நபர் நீதிவான் நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டபோது 100,000 ரூபாய் சரீரப்பிணையிலும் இரு ஆட்பிணையிலும்  விடுவிக்கப்பட்டுள்ளதுடன், ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை தோறும் களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையத்தில் கையொப்படமிட வேண்டுமென்றும் தெரிவிக்கப்பட்டது.

சந்தேக நபரை எதிர்வரும் மே மாதம் 16ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.
கடந்த 18ஆம் திகதி எருவில் மாரியம்மன் ஆலய பூசகரது வீட்டுக்கு அருகில் மோட்டார் சைக்கிளில் வந்த சந்தேக நபர் அசிட் வீசி தாக்குதல் நடத்திவிட்டு சென்றுள்ளார்.

இந்நிலையில், தாக்குதலுக்குள்ளான பூசகர் களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .