2026 ஏப்ரல் 10, வெள்ளிக்கிழமை

பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் மீதான தாக்குலுக்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் கைப்பற்றப்பட்

Super User   / 2011 ஏப்ரல் 16 , பி.ப. 04:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஜதுசன்)

மண்முனை தென் எருவில் பற்று  பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் பாக்கியராஜா மீது தாக்குதல் நடத்துவதற்கு பயன்படுத்தப்பட்டதாக கருதப்படும் மோட்டார் சைக்கிளொன்றை இன்று சனிக்கிழமை கைப்பற்றியுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பி.ஆர். மானவடு தெரிவித்தார்.

இத் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
மண்முனை தென் எருவில் பற்று  பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் பாக்கியராஜா நேற்று வெள்ளிக்கிழமை இரவு இனந்தெரியாத குழுவினரால் தாக்கப்பட்டு காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .