2026 மே 14, வியாழக்கிழமை

dd

மட்டக்களப்பு மாவட்டத்தில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்டஈடு

Kogilavani   / 2012 ஜனவரி 23 , பி.ப. 01:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

(எம்.சுக்ரி)
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பல்வேறு பிரதேசத்தைச் சேர்ந்தவர்களுக்கு  12 மில்லியன் ரூபா நட்டஈடு வழங்கும் நிகழ்வு நேற்று சனிக்கிழமை மட்டக்களப்பு மாநகர சபை மண்டபத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வின்போது, புனர்வாழ்வு புனரமைப்பு மற்றும் சிறைச்சாலைகள் அமைச்சர் சந்திரசிறி கஜதீர மற்றும் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் உட்பட பல அதிகாரிகள் கலந்துகொண்டு இவர்களுக்கான இக் கொடுப்பனவை வழங்கி வைத்தனர்.
இதன்போது, மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த 160 பேருக்கு இந்த நட்ட ஈட்டுக்கொடுப்பனவு வழங்கப்பட்டதாக புனர்வாழ்வு புனரமைப்பு அதிகார சபையின் பணிப்பாளர் தெரிவித்தார்.

மரணமடைந்த 60 பேருக்கும், காயமடைந்த, சொத்துக்கள் சேதமடைந்த 50 பேருக்கும் அரசாங்க உத்தியோகத்தர்கள் 50பேருக்கும் இந்த நட்ட ஈட்டுக்கொடுப்பனவுகள் வழங்கப்பட்டதுடன் 150 பேருக்கு இவ் அதிகார சபையினால் கடன்களும் வழங்கப்பட்டதாக அதன் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.

 



 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .