Super User / 2012 ஜனவரி 25 , பி.ப. 12:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ரி.லோஹித்)
வர்த்தகர்களிடம் இலஞ்சம் பெற்றார் என்ற குற்றச்சாட்டின் பேரில் வன இலாகா அதிகாரியொருவர் இலஞ்ச தடுப்பு பிரிவினரால் நேற்று செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டு ஏறாவூர் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இலுப்படிச்சேனையில் நேற்று செவ்வாய்க்கிழமை திறந்துவைக்கப்பட்ட வட்டார வன இலாகா காரியாலய திறப்பு விழாவுக்கு என மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள வர்த்தகர்களிடம் இலஞ்சம் பெற்றார் என்ற குற்றச்சாட்டிலேயே இவர் செய்யப்பட்டுள்ளார்.
மட்டு. மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி தொடக்கம் வாழைச்சேனை வரையிலுள்ள மர ஆலை உரிமையாளர்கள், பலகை விற்பனையாளர்கள், மரம் வெட்டி விற்பனை செய்பவர்கள் மற்றும் விறகு விற்பவர்கள் என பலரிடமிருந்து இவர் பணம் பெற்றுள்ளார்.
நிகழ்வு ஏற்பாட்டுக்கு பணம் வழங்கவில்லையென்றால் வியாபார உரிமங்கள் மற்றும் அனுமதிப் பத்திரங்கள் ரத்து செய்யப்ப்படும் என்றும் வர்த்தகர்களை இவர் மிரட்டியுள்ளார்.
மர ஆலை உரிமையாளர்களிடம் தலா 20,000 ரூபாவும், பலகை விற்பனையாளர்களிடம் தலா 7,500 ரூபாவும், மரம் வெட்டுபவர்களிடம் தலா 10,000 ரூபாவும் விறகு விற்பவர்களிடம் தலா 3,000 ரூபாவும் பெற்றுள்ளார்.
இவ்விடயம் சம்பந்தமாக ஏறாவூர் பிரதேச வர்த்தகர் ஒருவர் கொழும்பு இலஞ்ச தடுப்பு பிரிவுக்கு தெரியப்படுத்தியுள்ளார்.
குறித்த வர்த்தகரிடம் வன இலாகா அதிகாரி இலஞ்சம் பெறும் போதே இலஞ்ச தடுப்பு பிரிவினரால் குறித்த அதிகாரி கைதுசெய்யப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
இவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
8 minute ago
24 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
24 minute ago