Suganthini Ratnam / 2012 ஜனவரி 26 , மு.ப. 04:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(ஸரீபா)
மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு 50,000 ரூபா பெறுமதியான பிளாஸ்டிக் கதிரைகளை பிரதி அமைச்சர் பசிர் சேகுதாவூத் வழங்கியுள்ளார்.
2011ம் ஆண்டுக்கான தனது பன்முகப்படுத்தப்பட்ட வரவு - செலவுத்திட்ட நிதியில் இருந்து இந்த அன்பளிப்பை அவர் மேற்கொண்டுள்ளார்.
இதேவேளை, 2011ஆம் ஆண்டின் கமநெகும திட்டத்தில் பிரதி அமைச்சர் பசிர் சேகுதாவூத்தின் முயற்சியால் ஏறாவூர் பிரதேச சுகாதார அபிவிருத்திக்காக 4.4 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டு 3 மில்லியன் ரூபா பெறுமதியில் மீராகேணியில் கிராமோதய சுகாதார நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. மீதியாகவுள்ள 1.4 மில்லியன் ரூபாவுக்கு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகப் பிரிவில் உட்கட்டமைப்பு தேவைகளுக்காக செலவிடப்பட்டுள்ளதாக ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எச்.எம்.தாரிக் தெரிவித்தார்.
6 minute ago
22 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
22 minute ago