Menaka Mookandi / 2012 ஜனவரி 26 , மு.ப. 06:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(ஜிப்ரான்)
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 9 கிறிஸ்தவ ஆன்மீக அமைப்புக்கள் இணைந்து ஏற்பாடு செய்த பாரிய கிறிஸ்தவ ஒன்றிப்பு சமாதான பேரணியும் அமைதிக்கான பிரார்த்தனையும் மட்டக்களப்பு, திருகோணமலை மறைமாவட்ட பேராயர் கலாநிதி
கிங்ஸ்லி சுவாம்பிள்ளை தலைமையில் நேற்று மாலை மட்டக்களப்பு நகரில் இடம்பெற்றது.
கத்தோலிக்கம் மெதடிஸ்த திருச்சபை, இரட்சணியசேனை அமேரிக்கன் சிலோன் மிசன், திருக்குடும்ப கன்னியர் மடம், தென்னிந்திய திருச்சபை, எங்கிலிக்கன் திருச்சபை உள்ளிட்ட ஒன்பது கிறிஸ்தவ அமைப்புக்கள் இதில் பங்குகொண்டன.
பேராயர் கலாநிதி கிங்ஸ்லி சுவாம்பிள்ளையின் தலைமையில் தாண்டவன்வெளி காணிக்கை மாதா ஆலயத்தில் இடம்பெற்ற விசேட அமைதிப் பிரார்த்தனையை அடுத்து ஆரம்பமான கிறிஸ்தவ ஒன்றிப்புக்கான சமாதான பாதயாத்திரை, மட்டக்களப்பு திருகோணமலை பிரதான வீதிவழியாக சென்று கோட்டைமுனை மெதடிஸ்த ஆலயத்தில் நிறைவுபெற்றது. பெரும் எண்ணிக்கையிலான கிறிஸ்தவ மக்கள் இதில் பங்குகொண்டனர்.
.jpg)
.jpg)
7 minute ago
23 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
23 minute ago