2026 மே 14, வியாழக்கிழமை

பட்டப்பகலில் கொள்ளைச் சம்பவங்கள்; மோப்பநாயுடன் பொலிஸார் தேடுதல்

Suganthini Ratnam   / 2012 ஜனவரி 27 , மு.ப. 03:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கே.எஸ்.வதனகுமார்)

மட்டக்களப்பு நகரப் பகுதியில் பகல் வேளைகளில் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபடுவர்களை கைதுசெய்யும் முகமாக  பொலிஸார் மோப்பநாயுடன் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.

மட்டக்களப்பு நகரப் பகுதியில் பூட்டியிருக்கும் வீடுகளை உடைத்து  பகல் வேளைகளில் கொள்ளையிட்டு வரும் சம்பங்கள் அண்மைக்காலமாக இடம்பெற்றவண்ணமே உள்ளன.

இந்த நிலையில், பூம்புகார்ப் பகுதியில் பூட்டியிருந்த வீட்டை உடைத்து கொள்ளையிட்ட சம்பவம் ஒன்று நேற்றுமுன்தினம் புதன்கிழமை  பகல் வேளையில் இடம்பெற்றுள்ளது. குறித்த வீட்டில் எவரும் இல்லாத நிலையில் வீட்டின் யன்னலை உடைத்துக்கொண்டு உள்ளே  கொள்ளையர்கள், 294, 000 ரூபா பெறுமதியான தங்கநகைகளையும் 3000 ரூபா பணத்தையும் கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.

இந்த கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கைதுசெய்யும் முகமாகவே  மட்டக்களப்பு பொலிஸ் நிலைய குற்றப்புலன் விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி த.சாந்தகுமார் தலைமையிலான குழுவினர் மோப்பநாயுடன் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.  

மட்டக்களப்பில் எவரும் இல்லாத வீடுகளிலேயே பகல் வேளைகளில் இக்கொள்ளைச் சம்பவங்கள் அண்மைக்காலமாக இடம்பெற்று வருவதாகத் தெரிவித்த பொலிஸார்,  வீட்டை விட்டு புறப்படுவர்கள் அயல் வீட்டாரிடம் தெரிவித்து விட்டுப் போகுமாறும் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.

 

 


  Comments - 0

  • riswan Saturday, 28 January 2012 06:31 PM

    இந்த நாயை வைத்து கண்டுபிடுத்து விட்டார்களா...? மனிதன் நாயை விட கேவலமாய் போய்விட்டன் !!!.

    Reply : 0       0

    Azhar Monday, 30 January 2012 11:52 AM

    நாய்கள் இயன்ற அளவுதானே Vallai park um. மனிதன் என்ன செய்கின்றான்? எல்லாம் தெரிந்த மனிதன் எங்க?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .