Suganthini Ratnam / 2012 ஜனவரி 27 , மு.ப. 04:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.சுக்ரி)
மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பிரதான வீதியில் இன்று வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்ற வாகன விபத்தில் சிறுமி ஒருவர் உட்பட ஐந்து பேர் படுகாயமடைந்துள்ளனர்.
வீதியால் சென்றுகொண்டிருந்த மோட்டார் சைக்கிள் பாதையை கடக்க முற்பட்ட ஒருவருடன் மோதியபோதே இந்த விபத்துச் சம்பவித்ததாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர். இதன்போது பாதையை கடக்க முற்பட்டரும் மோட்டார் சைக்கிளில் பயணித்த சிறுமியும் உட்பட ஐந்து பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.
காயமடைந்தவர்கள் உடனடியாக காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இந்த விபத்துச் சம்பவம் தொடர்பில் காத்தான்குடி பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
7 minute ago
23 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
23 minute ago