Kogilavani / 2012 ஜனவரி 28 , மு.ப. 05:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
கோறளைப்பற்று பிரதேச சபை பிரிவிற்குட்பட்ட கொண்டையன்கேணி பிரதேசத்து மக்களை கிழக்கு மாகாண சபை உறுப்பினர் யூ.எல்.முபின் நேற்று வெள்ளிக்கிழமை நேரடியாக சென்று சந்தித்தார்.
இதன்போது, அம்மக்கள் எதிர்நோக்குகின்ற காணிப் பிரச்சினைத்தொடர்பில் அவர் கேட்டறிந்துகொண்டார்.
1960ஆம் ஆண்டுக்கு முற்பட்ட காலத்தில் இருந்து வாழ்ந்து வந்த இம் மக்கள் 1990ஆம் ஆண்டு நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையைத் தொடர்ந்து இடம்பெயர்ந்து வாழைச்சேனை, ஓட்டமாவடி, மீராவோடை போன்ற பிரதேசங்களில் வாழ்ந்து வந்தனர்.
தற்போது, நாட்டில் ஏற்பட்ட சமாதான சூழ்நிலையை தொடர்ந்து அம்மக்கள் மீளக்குடியமர்வதில் பல்வேறு தடங்கல்களை எதிர்நோக்கி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனைத் தொடர்ந்து கிழக்கு மாகாண சபை உறுப்பினர் யூ.எல்.எம்.முபீனை சந்தித்த இப் பிரதேச மக்கள் தாங்கள் எதிர் நோக்குகின்ற காணிப் பிரச்சினைகளுக்கு சரியான தீர்வினைப் பெற்றுத் தருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
மக்களின் கோரிக்கையையடுத்து அப் பிரதேசத்திற்குச் சென்ற கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொது மக்களைச் சந்தித்து விளக்கம் கேட்டறிந்ததுடன் இப் பிரச்சினைக்கு உடனடி தீர்வினைப் பெற்றுத் தருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக உறுதியளித்துள்ளார்.
.jpg)
7 minute ago
23 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
23 minute ago