2026 மே 14, வியாழக்கிழமை

dd

இலவச கண் பரிசோதனை முகாம்

Suganthini Ratnam   / 2012 ஜனவரி 29 , மு.ப. 08:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஸரீபா)

ஜம்இய்யதுஸ் ஸபாபின் அனுசரனையின் கீழ் கல்குடா தவ்ஹீத் ஜமாஅத்தின் சமூகசேவைப் பிரிவின் ஏற்பாட்டில் நாளைமறுதினம்  செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணி முதல் பகல் 12 மணி வரை இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெறவுள்ளது.

மீராவோடை எம்.பி.சி.எஸ் வீதியில் அமைந்துள்ள தாருஸ்ஸலாம் பள்ளிவாசலில் நடைபெறும் இம்முகாமில் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த விசேட கண் சத்திர சிகிச்சை நிபுணர்கள் வருகை தரவுள்ளனர்.

கண்களில் வெள்ளை படர்தல் நோயுள்ளவர்களை இனங்கண்டு அவர்களுக்கான சிகிச்சை  இலவசமாக வழங்கப்படவுள்ளது.

இம்முகாமில் கண்ணாடி அல்லது வேறு கண் நோய்களுக்கான மருந்துகள் வழங்கப்படமாட்டாது என்பதை கவனத்திற்கொண்டு, கண்களில் வெள்ளைப்படர்தல் நோயுள்ளவர்கள் மட்டும் வருகை தந்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். மேலதிக விபரங்களுக்கு 0777761479, 0719493939 என்ற தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்புகொள்ளவும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .