2026 மே 14, வியாழக்கிழமை

காத்தான்குடியில் கரையொதுங்கிய திமிங்கிலம் பரிசோதனைக்கு

Suganthini Ratnam   / 2012 ஜனவரி 30 , மு.ப. 09:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சுக்ரி)

மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி கடற்கரையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை கரையொதுங்கிய திமிங்கிலத்தின்  தலையை கொழும்பிலுள்ள தேசிய நீரக ஆராய்ச்சி நிறுவனமான நாரா நிறுவனத்திற்கு அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட கடற்றொழில் திணைக்கள உதவிப் பணிப்பளார் எஸ்.ரி.ஜோர்ஜ் தெரிவித்தார்.

கரையொதுங்கிய இத்திமிங்கிலம் 2,000 கிலோவுக்கும் அதிகமான நிறையை கொண்டுள்ளதால்  அதன்  தலையை மாத்திரம் நாரா நிறுவனத்திற்கு அனுப்பவுள்ளதாகவும் அவர் கூறினார்.  இத்திமிங்கிலத்தின் வெட்டப்பட்ட ஏனைய பாகங்கள் புதைக்கப்பட்டுள்ளன.
17 அடி அகலமும் 6 அடி நீளமும் கொண்ட இத்திமிங்கிலம் காத்தான்குடி கடற்கரையில் கதையொதுங்கியது கிழக்கு மாகாணத்தில் இதுவே முதற்தடவையாகும்.  ஏற்கெனவே பனிச்சங்கேணி கடற்கரையில் பெரியளவிலான டொல்பின் மீன் ஒன்று கரையொதுங்கியதாகவும் உதவிப்பணிப்பாளர் ஜோர்ஜ் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .