Kogilavani / 2012 ஜனவரி 30 , மு.ப. 10:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(எம்.சுக்ரி)
மட்டக்களப்பு கல்லியன்காடு பகுதியில் பிரம்மகுமாரிகள் தியான மண்டபம் நிர்மாணிப்பதற்கு முஸ்லிம்களின் பள்ளிவாயல் காணியை ஒரு போதும் நாம் ஆக்கிரமிக்கவில்லையென பிரம்ம குhரிகள் அமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் கே.சுரேஸ் தெரிவித்தார்.
பிரம்மகுமாரிகள் அமைப்பு தொடர்பாகவும் மட்டக்களப்பு மாவட்டத்தில் அதன் ஆண்மீக் செயற்பாடு தொடர்பாகவும் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கும் மாநாடு நேற்று ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பு கல்லியன்காடு பிரம்ம குமாரிகள் தியான மண்டபத்தில் நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
'மட்டக்களப்பில் வாடகை கட்டிடமொன்றில் நாங்கள் எமது தியான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தோம்.அப்போது எமக்கு ஒரு கட்டிடம் அமைப்பதற்கு காணி தேவைப்பட்டது. அதற்காக கொத்துக்குளம் பகுதியில் ஒரு காணியை நாம் மண்முனை வடக்கு பிரதேச செயலாளரிடம் கேட்டுச் சென்றோம். அதன் போது மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் இந்த காணியை எமக்கு கட்டிடம் அமைப்பதற்காக அடையாளப்படுத்தி தந்தார்.
அதன் பின்னர் இந்த காணியில் எமது பிரம்ம குமாரிகள் அமைப்புக்கான கட்டிடம் அமைப்பது தொடர்பாக அதற்காக ஒதக்கப்பட்ட காணியென மூன்று மாதங்கள் பெயர்ப்பலகை இட்டிருந்தோம். ஆனால் அப்போது எந்த விதமான எதிர்ப்பும் எமக்கு வரவில்லை.
அதன் பின்னர் 16 இலட்சம் ரூபா செலவில் இக்கட்டிடத்திற்கான அத்திவாரம் போட்ட பின்னர்தான் இது ஏற்கனவே பள்ளிவாயசல் இருந்த காணியென்று கூறப்பட்டது.
அத்துடன் இக்காணிக்குப் பதிலாக பள்ளிவாசலுக்கு வேறு ஒரு காணி வழங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இக்காணியில் ஏதாவது சட்ட பிரச்சினைகள் உள்ளதா என பலரிடமும் விசாரித்த போது சட்ட பிரச்சினைகள் எதுவும் இல்லையென கூறப்பட்டது.
சட்டத்தை மீறி இந்த கட்டிடத்தை நாம் நிர்மாணிக்கவில்லை. சட்ட ரீதியாக முழு அனுமதியுடன் தான் இதை நிர்மாணித்துள்ளோம்.
இந்த கட்டிடத்திற்கான அனுமதி பெறுவதற்காக மட்டக்களப்பு மாநகர சபைக்கு விண்ணப்பித்த போது எமது கட்டிட அனுமதி தருவதில் தாமதம் ஏற்பட்டது. பின்னர் மட்டக்களப்பு மாநகர சபையினாலும் அனுமதி வழங்கப்பட்டது.
நாங்கள் இந்த இடத்தில் பிரம்ம குமாரிகள் மண்டபத்தை அமைத்தது தொடர்பில் முஸ்லிம் சமூக நிறுவனங்கள் எதுவும் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. அதே போன்று பள்ளிவாசல் நிர்வாகம் எந்த எதிர்ப்புக்களையும் காட்டவில்லை.
ஆனால் இரண்டு பேர் மாத்திரமே இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த கட்டிட விடயத்தில் ஏதாவது சட்ட பிரச்சினை இருப்பின் நியாயத்தை பெற்றுக்கொள்ள அவர்கள் நீதிமன்றத்தை நாடமுடியும்.
எங்களுக்கு இந்த ஆன்மீக நடடிக்கையை மேற்கொள்ள எந்த நாடும் பணம் தரவில்லை. நாங்கள் யாரிடமும் கையேந்துவதுமில்லை.
சுனாமி அனர்தத்திற்கு பின்னர் எமது இந்த நடவடிக்கை மட்டக்களப்பில் வேகமாக வளர்ச்சி பெற்றுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் 40 கிளைகள் இதன் கீழ் உள்ளன. மத்திய கிழக்கு போன்ற நாடுகளில் முஸ்லிம்களும் இருக்கின்றனர்.இதில் ஏழு நாள் பயிற்சி வகுப்பு நடைபெற்று வருகின்றது. இதிலும் பலர் கலந்து கொள்கின்றனர். அதே போன்று தினமும் இந்த தியான நடவடிக்கையில் கலந்து கொள்ளும் பலர் இருக்கின்றனர்.
1989ஆம் ஆண்டு இலங்கைக்கு இது வந்த போதிலும் 1994ம் ஆண்டிலிருந்து சிறந்த முறையில் இது செயற்பட ஆரம்பித்தது.
மட்டக்களப்பு மாவட்டத்திற்கு 1998 ஆம் ஆண்டு வந்தது ஆனால் சுனாமி அனர்தத்திற்கு பின்னர் மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிக வரவேற்பை இது பெற்றது.
சுனாமி அனர்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பெதீக உதவி மாத்தரமின்றி ஆண்மீக உதவியையும் வழங்கியதன் மூலம் இது பெரும் வரவேற்பை பெற்றது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
பிரம்ம குமாரிகள் அமைப்பின் சார்பில் வாழைச்சேனை ஆதார வைத்திய சலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் எஸ்.தட்சனாமூர்த்தி உட்பட அதன் முக்கியஸ்த்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
.jpg)
.jpg)
.jpg)
6 minute ago
22 minute ago
Dr.Tariq Monday, 30 January 2012 09:34 PM
If there is a legal issue, it should be handled in proper manner rather then in other ways. I think, muslim scholars must intervene and solve this issue ASAP.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
22 minute ago