2026 மே 14, வியாழக்கிழமை

dd

'கிழக்கு பல்கலையில் முறைகேடுகள்'

Super User   / 2012 ஜனவரி 30 , பி.ப. 01:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கெலும் பண்டார)

நிர்வாக முறைகேடுகள் மற்றும் நிதி மோசடி போன்ற நடவடிக்கைகள் கிழக்கு பல்கலைக்கழகத்தில் இடம்பெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இவ்வாறான பல்வேறு முறைகேடுகளை தன்னால் இனங்கான முடிந்தது என கடந்த 11 மாத காலமாக கிழக்கு பல்கலைக்கழகத்தின் தகுதிவாய்ந்த அதிகாரியாக செயற்பட்ட பேராசிரியர் ரஞ்சித் அர்த்தனநாயக்க தெரிவித்தார்.

எனினும் இது தொடர்பிலான தகவல்களை ஊடகங்களுக்கு வழங்க அவர் மறுத்துவிட்டார்.

"என்னை அமைச்சரே நியமித்தார். இவ்வாறான நிலையில் இது தொடர்பான தகவல்கனை வழங்குவது நல்லதல்ல" எனவும்  பேராசிரியர் அர்த்தனநாயக்க தெரிவித்தார்.

வந்தாறுமுலையில் அமைந்துள்ள பல்கலைக்கழகத்தில் நிர்வாகம், நிதி முகாமை மற்றும் கல்வி சார் நடவடிக்கைகளில் முறைகேடுகள் இடம்பெறுவதாக அவர் குறிப்பிட்டார்.

இது எவ்வளவு காலமாக இடம்பெற்று வருகின்றது என வினவியதற்கு, கடந்த 30 வருடமாக இடம்பெற்று வருதாக பேராசிரியர் அர்த்தனநாயக்க தெரிவித்தார்.

இதேவேளை, பல்கலைக்கழகத்தில் நிலைமையை சரி செய்ய நடடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக உயர் கல்வி அமைச்சின் செயலாளர் கலாநிதி சுனில் ஜயந்த நவரத்ன தெரிவித்தார்.

அத்துடன் பல்கலைக்கழகத்திற்கான புதிய உப வேந்தர் மிக விரைவில் நியமிக்கப்படுவார் எனவும் அவர் குறிப்பிட்டார்.
 
 உப வேந்தர் பதவிக்காக மூன்று பேரின் பெயர்கள் ஜனாதிபதியிடம் முன்மொழியப்பட்டுள்ளது. ஜனாதிபதிக்கு மாத்திரமே இவர்களில் ருவரை தெரிவு செய்யும் அதிகாரமுள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட இந்த பல்கலைக்கழகத்தின் விரிவுரையாரொருவர் 2004ஆம் ஆண்டு இனந்தெரியாத குழுவினால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

அத்துடன் 2006ஆம் ஆண்டு கடத்தப்பட்ட உப வேந்தர் போராசிரியர் எஸ்.ரவீந்தரநாத் தொடர்பில் இதுவரை எந்தவித தகவல்களுமில்லை. பின்னர் பல்கலைக்கழகத்தில் பெரும் எண்ணிக்கையிலான விரிவுரையாளர்கள் நாட்டை விட்டும் வெளியேறினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .