Kogilavani / 2012 மார்ச் 21 , மு.ப. 04:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(ஜிப்ரான்)
ஜெனீவாவில் இடம்பெறும் மனித உரிமைகள் மாநாடு தொடர்பாக மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ் பட்டதாரிகளுக்கு தெளிவூட்டும் செயலமர்வு வாழைச்சேனை பௌத்த ஜெயந்தி விகாரையில் நேற்று முன்தினம் மாலை இடம்பெற்றது.
கல்குடா தொகுதி ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி கிளையின் ஏற்பாட்டில் விகாராதிபதி நாவானே அபேவன்சாலங்கார தேரரரின் தலைமையில் இடம்பெற்ற இச் செயலமர்வில் பெரும் எண்ணிக்கையிலான ஆண் பெண் தமிழ் பட்டதாரிகளும் கட்சி முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.
ஜெனீவா மாநாட்டின் நோக்கம், அதனால் மேற்கத்தைய நாடுகள் அடையப்போகும் நன்மைகள், வடகிழக்கில் இடம் பெற்றுவரும் அபிவிருத்திப் பணிகள் உட்பட பல்வேறு விடயங்கள் குறித்து விகாராதிபதி பட்டதாரிகளுக்கு விளக்கமளித்தார்.
கல்குடா தொகுதி ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி பிரதம அமைப்பாளர் டி.எம்.சந்திரபால உட்பட பலர் இதில் கலந்து கொண்டனர்.
.jpg)
.jpg)
12 minute ago
1 hours ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
1 hours ago
1 hours ago
2 hours ago