2026 மே 04, திங்கட்கிழமை

விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் மாணவர்கள் மேற்கொண்ட பகிஷ்கரிப்பு நிறைவு

Kogilavani   / 2012 மார்ச் 22 , மு.ப. 04:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.சுக்ரி)

மட்டக்களப்பு கல்லடியிலுள்ள சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் மாணவர்கள் நேற்று வியாழக்கிழமை மேற்கொண்டிருந்த வகுப்பு பகிஷ்கரிப்பு நடவடிக்கை முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.

மாணவர்களுக்கு வழங்கப்பட்ட உறுதி மொழியினையடுத்து மாணவர்களின் பகிஸ்கரிப்பு நடவடிக்கை முடிவுக்கு வந்தது.
கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் கலாநதி கிட்ணன் கோவிந்தராஜாவுக்கும் மாணவர்களுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று மாலை இடம்பெற்றது.

இதன்போது, மாணவர்களுக்க வழங்கப்பட்ட உறுதிமொழியை தொடர்ந்து வகுப்பு பகிஷ்கரிப்பு நடவடிக்கை முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

இந்த சந்திப்பின்போது, சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்தில் காணப்படும் பல்வேறு குறைபாடுகள் குறித்து மாணவர்கள் உபவேந்தருக்கு எடுத்துக் கூறியுள்ளனர்.

மாணவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்த உப வேந்தர் இவற்றை எழுத்து முலம் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொண்டதுடன் மாணவர்களின் இக்கேரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து மாணவர்கள் தமது போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தனர்.
மேற்படி நிறுவகத்தின் மாணவர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வை வைத்து நேற்று வகுப்பு பகிஷ்கரிப்பு நடவடிக்கையில் ஈடுப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .