2026 மே 04, திங்கட்கிழமை

மாநகரசபையின் பராமரிப்பிலுள்ள வீதிகளை குறித்துக்காட்ட வேண்டும் என ஆலோசனை

Menaka Mookandi   / 2012 மார்ச் 22 , மு.ப. 09:45 - 0     - {{hitsCtrl.values.hits}}



(ஏ.எச்.ஏ.ஹூஸைன்)


மட்டக்களப்பு மாநகர சபையின் பராமரிப்பின் கீழ் உள்ளடங்கும் வீதிகளை பெயர்ப்பலகைகள் மூலம் வேறுபடுத்திக் குறித்துக்காட்ட வேண்டும் என சிவில் சமூகப்பிரதிநிதிகள் மாநகர முதல்வர் திருமதி சிவகீத்தா பிரபாகரனிடம் ஆலோசனை தெரிவித்துள்ளனர்.

இன்று வியாழக்கிழமை  மாநகர சபை முதல்வரின் அலுவலகத்தில் சிவில் சமூகப் பரதிநிதிகளுக்கும் மாநகர சபை முதல்வர், பிரதி முதல்வர், ஆணையாளர், மற்றும் கணக்காளர் ஆகியோருக்கிடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே இந்த விடயம் சிவில் சமூகப் பிரதிநிதிகளால் மாநகர முதல்வரின் கவனத்திற்கு ஆலோசனையாக முன்வைக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாநகர சபையின் ஆளுகைக்குட்பட்ட பிரதேசத்தில் பல வீதிகள் மாநகர சபையின் பராமரிப்பிலும் சில வீதிகள் வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பராமரிப்பின் கீழும் வருகின்றன.

வீதிப்பராமரிப்பு விடயத்திலுள்ள பொறுப்புக் கூறல்களில் பல சிக்கல்கள் தோன்றுவதால் சிவில் சமூகம் அறிந்து கொள்ளும் பொருட்டு மாநகர சபை பராமரிப்பிலுள்ள வீதிகளை அறிவித்தல் பலகைகளின் மூலம் வேறுபடுத்திக் காட்டுமாறு ஆலோசனை வழங்கப்பட்டது.

இந்த ஆலோசனையை மாநகர சபை மேயர், பிரதி மேயர், ஆணையாளர், கணக்காளர் உள்ளிட்ட அனைவரும் ஏற்றுக்கொண்டு 'இது மாநகர சபையின் பராமரிப்பிலுள்ள வீதி' என பெயர்ப் பலகைகளைத் தொங்கவிட நடவடிக்கை மேற்கொள்வதாகத் தெரிவித்தனர்.

கிழக்கு மாகாண முதலமைச்சரின் முன்னாள் செயலாளர் திரு எஸ். மாமாங்கராஜா தலைமையிலான சிவில் சமூகப் பிரதிநிகள் மாநகர முதலவர் உள்ளிட்ட மாநகர சபை நிர்வாகத்தை இன்று சந்தித்திருந்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .