2026 மே 04, திங்கட்கிழமை

கிராமத்திற்கு ஒரு அபிவிருத்தி வேலைத்திட்டம் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆரம்பம்

Super User   / 2012 மார்ச் 23 , மு.ப. 04:26 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சுக்ரி,ஏ.எச்.ஏ. ஹூஸைன்,ஜிப்ரான், ஸரிபா,ரி.லோஹித்)

பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் 'ஒரு கிராமத்திற்கு ஒரு வேலைத்திட்டத்தின் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான பிரதான நிகழ்வு கோறளைப்பற்று பிரதேச செயலகப் பிரிவில் நாசிவன்தீவு கிராமத்தில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.

மட்டக்களப்பு மாவட்டச் செயலாளர் சுந்தரம் அருமைநாயகம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன், தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.யோகேஸ்வரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்

 இதேவேளை, இந்நிகழ்ச்சி திட்டத்தின் மற்றுமொறு அபிவிருத்தி வேலைத்திட்டம் இன்று வெள்ளிக்கிழமை காலை ஏறாவூர் பிரதேசத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

ஏறாவூர் நகர சபை தலைவர் அலிஸாஹிர் மௌலானா இந்த வேலைத்திட்டத்தை ஆரம்பித்து வைத்தார். ஏறாவூர் நகர பிரதேச செயலாளர் பிரிவிட்குட்பட்ட 17 கிராம சேவகர் பிரிவுகளுக்குமான அபிவிருத்தி வேலைத்திட்டத் திட்டங்கள் இதன் கீழ் மேற்கொள்ளப்படவுள்ளது.

இதேவேளை, குறித்த திட்டத்தின் கீழ் காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவில் சுகாதார சிகிச்சை நிலையமொன்றும் குர்ஆன் மத்ரஸாக்கள் அபிவிருத்தி சங்கத்திற்கான கட்டிடமொன்றையும் நிர்மானிப்பதற்கான அடிக்கல் நடப்பட்டது.







  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .