2026 மே 04, திங்கட்கிழமை

விவசாயிகளுக்கான கருத்தரங்கு

Suganthini Ratnam   / 2012 மார்ச் 25 , மு.ப. 05:28 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஆர்.அனுருத்தன்)

மட்டக்களப்பு, சித்தாண்டியில் இலங்கை விவசாயிகள் ஒன்றியத்தினால் அப்பகுதி விவசாயிகளுக்கான விழிப்புணர்வு பயிற்சிக் கருத்தரங்கு நேற்று சனிக்கிழமை நடைபெற்றது.

நிலத்தைப் பாதுகாப்போம், சுற்றாடல் மாசுபடுதலைத் தடுப்போம், சேதன உரம் இயற்கை இரசாயனக் கலவைகளைப் பயன்படுத்தி நாமும் பிற உயிரினங்களும் நஞ்சற்ற உணவை உண்போம், நமது பாரம்பரிய விதையினங்களை தேடி உற்பத்தி செய்து விவசாயிகளது வீண் செலவீனங்களைத் குறைப்போம் என்பதற்கிணங்க இக்கருத்தரங்கு நடத்தப்பட்டது.

சுவாமி நடராஜானந்தாஜி சிறுவர் இல்லத்தில் மாவட்ட விவசாய ஒன்றியத் தலைவர் ஜ.கமலநாதன் தலைமையில் இக்கருத்தரங்கு நடைபெற்றது. 

  Comments - 0

  • Nithi Monday, 26 March 2012 01:24 PM

    உண்மையில் இன்றைய காலகட்டத்தில் இயற்கை விஞ்ஞான பயிர் செய்கை சிறந்தது ஒன்றாகும். இதனைக் கடைப்பிடித்து வந்தால் எமக்கும் எமது சமூகத்துக்கும் எந்தவித பாதகமும் இல்லை.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .