2026 மே 04, திங்கட்கிழமை

யானை தாக்கியதில் ஆசிரியை படுகாயம்

Menaka Mookandi   / 2012 மார்ச் 27 , பி.ப. 01:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கே.எஸ்.வதனகுமார், ஜீவிந்திரன்)

போரதீவுப்பற்று, வெல்லாவெளி பிரதேச செயலகர் பிரிவிற்குட்பட்ட மாலையர் கட்டுப் பகுதியில் பாலர் பாடசாலை ஆசிரியை ஒருவரை யானை தாக்கியதில் படுகாயமடைந்து கால் முறிந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பாலையர்கட்டு பாலர் பாடசாலை ஆசிரியையான 20வயதுடைய மேற்படி ஆசிரியை, இன்று செவ்வாய்க்கிழமை 2.30 மணியளவில் தனது வீட்டில் இருந்து வெளியே துவிச்சக்கர வண்டியில் சென்றபோது காட்டிற்குள் நின்ற யானை தாக்கியதில் படுகாயம் அடைந்து கால் முறிந்துள்ளது.

தாக்கப்பட்ட ஆசிரியையை மீட்ட பொதுமக்கள் களவாஞ்சிக்குடி வைத்தியசாலையில் அனுமதித்தனை அடுத்து அங்கிருந்து மேலதிகச் சிகிச்சைக்காக மட்டக்களப்பு வைத்திசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .