2026 மே 04, திங்கட்கிழமை

புதிதாக நிர்மாணிக்கப்பட்ட காத்தான்குடி காழி நீதிமன்றம் இன்னும் திறக்கப்படாத நிலையில்

Menaka Mookandi   / 2012 மார்ச் 30 , மு.ப. 06:04 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சுக்ரி)


காத்தான்குடியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள காழி நீதிமன்றக் கட்டிடம் இன்னும் திறக்கப்படாமல் பல மாதங்களாக மூடப்பட்ட நிலையிலேயே உள்ளன.

காத்தான்குடி காழி நீதிமன்றத்திற்கென காத்தான்குடி டீன் வீதியில் ஒரு கட்டிடமொன்று நிர்மாணிக்கப்பட்டு அந்த நிர்மான வேலைகள் முடிந்து பல மாதங்களாகியும் இன்னும் அந்தக் கட்டிடம் திறக்கப்படாமல் உள்ளது.

காத்தான்குடி காழி நீதிமன்ற நடவடிக்கைகள் தற்போது காத்தான்குடி ஆறாம் குறிச்சியிலுள்ள பல நோக்கு மண்டபத்தில் தற்காலிகமாக இயங்கி வருகின்றது.

காழி நீதிமன்றத்திற்காக நிர்மாணிக்கப்பட்டுள்ள இக்கட்டிடத்தை திறப்பதன் மூலம் காழி நீதிமன்ற நடவடிக்கைகளை இலகுவாக மேற்கொள்ள முடியுமென பொதுமக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .