2026 மே 01, வெள்ளிக்கிழமை

ஏறாவூர் கிரிக்கெட் போட்டியில் பப்புவாநியூகினியாவின் அமைச்சர் முதல் பந்தை வீசினார்

Super User   / 2012 ஜூன் 02 , பி.ப. 05:35 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

ஏறாவூரில் நேற்று வெள்ளி பிற்பகல் இடம்பெற்ற உள்ளூர் கிரிக்கெட் போட்டியொன்றை  பப்புவாநியூகினியாவின் முன்னாள் பிரதமரும் அந்நாட்டின் தற்போதைய வர்த்தக உற்பத்தித்துறை அமைச்சருமான மெக்கரே மொரன்டா முதல் பந்தை வீசி ஆரம்பித்து வைத்தார்.

ஏறாவூர் அஹமட் பரீட்  அணிக்கும் சௌண்டர்ஸ் அணிக்குமிடையிலான ரூபி பிரிமியர் லீக் ககிண்ண கடினப் பந்து கிரிக்கெட் போட்டி ஏறாவூர் ஆற்றங்கரை அஹமட் பரீட் விளையாட்டு மைதானத்தில்  நேற்று பிற்பகல் ஆரம்பமாகியது.

இந்நிகழ்வில் பப்புவாநியூகினி முன்னாள் பிரதமரின் பாரியார் ஹதி மொஸ்லின் மொரன்டா, சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகாரப் பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், இலங்கைக் கிரிக்கெட் அணியின்  முன்னாள் தலைவரும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான அர்ஜுனா ரணதுங்க, அவரது சகோதரர் தம்மிக ரணதுங்க, ஸ்ரீலங்கா ரெலிகொம்மின் மட்டக்களப்பு நிறைவேற்றுப் பொறியியலாளர் எஸ்.டி. பிரின்ஸ் மற்றும் ஏறாவூர் நகர சபை உறுப்பினர்களான அக்கீல் அர்சாத், அக்கீல் ஆசாத் உட்பட இன்னும் பல பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

ஏறாவூரில் ஒரு உள்ளுர் விளையாட்டு நிகழ்ச்சி வெளிநாட்டு பிரமுகர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டதும்; அர்ஜுனா ரணதுங்க கலந்து கொண்டதும் இதுவே முதற் தடவையாகும்.






  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .