2026 மே 01, வெள்ளிக்கிழமை

ஆரையம்பதியில் 'புறநெகும' அபிவிருத்தித் திட்டம்

Suganthini Ratnam   / 2012 ஜூன் 03 , மு.ப. 04:28 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சுக்ரி)

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஆரையம்பதி பிரதேச செயலாளர் பிரிவில் 'புறநெகும' அபிவிருத்தி திட்டத்தினை கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் நேற்று சனிக்கிழமை ஆரம்பித்து வைத்தார்.

உலக வங்கியின் நிதி உதவியுடன் உள்ளூராட்சிமன்றங்களை பலப்படுத்தும் வகையில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள பிரதேசங்களுக்கு இடையிலான கிராமிய சிறுநகர அபிவிருத்தி முனைப்பு என்ற  இத்திட்டத்தின் கீழ் இவ் அபிவிருத்தித் திட்டம் மேற்கொள்ளப்படுகின்றது.

ஆரையம்பதி பிரதேச செயலாளர் பிரிவில் ஆரையம்பதியிலிருந்து காங்கேயனோடை ஊடாக சென்று வாவியை அடையும் வடிகாலமைப்புத்திட்டம், ஆரையம்பதி நவரட்னராஜா வித்தியாலய வீதி, ஆரையம்பதி நாவலடி வீதி, கிரான்குளம் வீதி ஆகியவற்றின் புனரமைப்புக்கான அபிவிருத்தி வேலைகளை கிழக்கு மாகாண முதலமைச்சர் ஆரம்பித்துவைத்தார்.

இந்த வைபவத்தில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பூ.பிரசாந்தன், கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் எம்.உதயகுமார், ஆரையம்பதி பிரதேச சபையின் தவிசாளர் திருமதி கிறிஸ்டினா சசிகரன், ஆரையம்பதி பிரதேச சபை உறுப்பினர்கள், ஆரையம்பதி பிரதேச சபையின் செயலாளர் உட்பட முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .