2026 மே 01, வெள்ளிக்கிழமை

மட்டு. புதுக்குடியிருப்பு ஸ்ரீபத்திரகாளி அம்மன் ஆலயத்தில் தங்கநகைகள் கொள்ளை

Suganthini Ratnam   / 2012 ஜூன் 04 , மு.ப. 07:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

                                                                                                      (ஆர்.அனுருத்தன்)
மட்டக்களப்பு,  புதுக்குடியிருப்பு ஸ்ரீபத்திரகாளி அம்மன் ஆலயத்திலுள்ள அம்மனுக்கு அணிவித்திருந்த பெறுமதியான தங்கநகைகள் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு கொள்ளையிடப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. 

ஆலயத்தின் உட்புற பூட்டுக்கள் உடைக்கப்பட்டு மூல விக்கிரகத்திலுள்ள அம்மனுக்கு அணிவிக்கப்பட்டிருந்த தங்கநகைகளே கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாகவும் 
108 நவரத்தினம் பதிக்கப்பட்ட 90 கிராம் தங்கக்கிரீடம், 64 கிராம் தங்கத்தாலிக்கொடி, சுமார் 37 கிராம் பென்ரன் போடப்பட்ட தங்கச்சங்கிலி, சுமார் 15 கிராம்  ஓம் தங்கப்பதக்கச் சங்கிலி ஆகியவையே களவாடப்பட்டுள்ளதாக
ஆலய நிர்வகத்தினர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.

இக்கொள்ளைச் சம்பவம் தொடர்பில் வாழைச்சேனை பொலிஸார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .