2026 ஏப்ரல் 29, புதன்கிழமை

கட்டாக்காலிகளால் காத்தான்குடி கடற்கரை பிரதேசம் பாதிப்பு

Menaka Mookandi   / 2012 ஜூன் 12 , மு.ப. 07:26 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஜிப்ரான்)


கிழக்கு மாகாணத்தின் மிகப்பெரிய ஓய்வு தளமான காத்தான்குடி கடற்கரை பிரதேசமெங்கும் அலைந்து திரியும் மாடுகள் மற்றும் நாய்கள் உட்ப கட்டாக்காலிகளினால் தினமும் ஓய்வெடுப்பதற்காகவும் பொழுதைக் கழிக்கவும்வரும் ஆயிரக்கணக்கனான மக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொள்வதாக விசனம் தெரிவிக்கின்றனர்.

மட்டக்களப்பு, காத்தான்குடி, ஆரையம்பதி, கல்முனை உட்பட பல இடங்களிலிருந்து இக்கடற்கரைத்திடலுக்கு வெள்ளிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஏராளமானோர் வருகை தருகின்றனா.; தினமும் உள்ளூர்வாசிகளும் இங்கு வருகை தருவது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், கட்டாக்காலிகள் நடமாடித்திரிவதாலும் மலம்கழிப்பதாலும் மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர் கொண்டுள்ளனர். குறித்த கடற்கரை பிரதேசத்தை கட்டாக்காலிகளை அகற்றி தூய்மைப்படுத்துமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .