2026 ஏப்ரல் 29, புதன்கிழமை

மட்டு. பயிலுனர் பட்டதாரி நியமனம்: விண்ணப்பிக்க தவறிய, கடிதம் கிடைக்காதோருக்கு நேர்முகப்பரீட்சை

Menaka Mookandi   / 2012 ஜூன் 20 , மு.ப. 08:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ரி.லோஹித்)

மட்டக்களப்பு மாவட்டத்தில் பயிலுனர் பட்டதாரிகள் நியமனத்திற்கு விண்ணப்பிக்கத் தவறியவர்களுக்கும், நேர்முகப்பரீட்சைக்கு தோற்றக் கிடைக்காதவர்களுக்குமான நேர்முகப் பரீட்சைகள் இன்று புதன்கிழமை காலைமுதல் நடைபெறுகின்றன.

மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனிடம் பட்டதாரிகள் விடுத்த வேண்டுகோளுக்கிணங்க இந்த நேர்முகப் பரீட்சைகளுக்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

பாதிக்கப்பட்ட பட்டதாரிகள் குறித்து மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எம்.ஏ.சார்ளஸ்யிடம் விடுத்து வேண்டுகோளுக்கிணங்க அவர், பொது நிருவாக உள்நாட்டலுவல்கள் அமைச்சிடம் தொடர்புகொண்டு நடவடிக்கை எடுக்கப்பட்டதற்கமைவாக இந்த நேர்முகப்பரீட்சைகள் நடைபெறுகின்றன.

கடந்த மாதம் 5ஆம் திகதி முதல் 7ஆம் திகதிவரை மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள வேலையற்ற பட்டதாரிகளை பயிலுனர் அடிப்படையில் அரச சேவையில் உள்வாங்குவதறடகான நேர்முகப்பரீட்சைகள் நடைபெற்றிருந்தன.

இவ் நியமனங்கள் திருமலை, அம்பாறைமாவட்டங்களில் வழங்கப்பட்டுள்ள நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் விரைவில் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .