2026 ஏப்ரல் 10, வெள்ளிக்கிழமை

சலுகை அரசியல் என்பது தமிழர் போராட்ட வரலாற்றில் இல்லை: இரா. துரைரெட்ணம்

Super User   / 2012 ஒக்டோபர் 02 , பி.ப. 02:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ரி.லோஹித்)

சலுகை அரசியல்  என்பது  தமிழர் போராட்ட வரலாற்றில் இல்லை அத்தகைய அரசியலை நடத்த வேண்டுமாக இருந்திருந்தால் அதற்கான மாற்று வழிகளும், அரசியல் முகாம்களும்  நிறையவே  உள்ளன என கிழக்கு மாகாண சபையின் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் இரா.துரைரெட்ணம் தெரிவித்தார்.

பதவிகளுக்கும், சலுகைகளுக்கும் அப்பாற்பட்ட வகையில் தமிழ் பேசும் மக்களுக்கு சேவையாற்றN;வ விரும்புகின்றேன் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

"தமிழ் தேசிய கூட்டமைப்பு  பதவிகளையும் சலுகைகளையும் நம்பி உருவாக்கப்பட்ட ஒன்றல்ல. தமிழ் மக்களின் விடுதலை உணர்விற்கு மதிப்பளித்து அதன் உரிமையை வென்றெடுக்கும் நோக்கில் தமிழ் தேசிய உணர்வின் அடிப்படையில் தமிழ் தேசியத்தின் ஒற்றுமையை வலியுறுத்தியே உருவாக்கப்பட்டது.

கடந்த கால வரலாற்று தவறுகளை மறந்து ஒடுக்கப்பட்ட எமது மக்களின் விடுதலைக்காக தமிழ் தேசிய இனம் ஒன்றுபட வேண்டிய காலத்தின் கட்டாய தேவையை உணர்ந்து இம்முறை தமிழ் தேசிய உணர்வாளர்கள் அனைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பு என்ற ஒரு குடையின் கீழ்  ஒன்றுபட்டு கிழக்கு மாகாண தேர்தலுக்கு முகம் கொடுத்தோம்.

எமது நோக்கங்களும், குறிக்கோளும் தமிழ் தேசியத்தின் உரிமையை வென்றெடுப்பதே ஆகும். இந்த உரிமை போராட்டத்தை வென்றெடுத்த எங்களுக்கு பதவிகளும் சலுகைகளும் தேவையில்லை. அவை எமது போராட்ட பாதைக்கு தடைக்கல்லாகவும் அமையக்கூடாது.

சுமார் 60 ஆண்டு கால தமிழர் துன்பங்களையும் அனுபவங்களையும் அதன் வலிகளை கண்டும் அனுபவித்தும் உணர்ந்தவன் என்ற வகையில் பதவிகளையும் சலுகைகளையும் புறந்தள்ளி என்னோடு எமது இனத்தின் இலட்சிய வேள்வியின் வெற்றிக்கு கைகோர்த்து உழைத்து நிற்க தயாராகயிருக்கும் குறிக்கோள் மாறாத அனைத்த உறவுகளையும் உடன் இனைத்துக் கொண்டு எமது தேசிய இனத்தின் வாழ்வியல் உரிமைக்காகவும் அரசியல் இருப்புக்காகவும் தொடர்ந்து குரல் கொடுப்பேன்.


சலுகைகளையும், பதவிகளையும் மனதிலிருத்தி அதிகார வெற்றிக்காக எமது இனத்தின் உரிமைகளையும், உணர்வுகளையும் தாரை வார்த்துக் கொடுக்க நானொரு போதும் தயாரில்லை. எந்த மக்கள் என்னை நேசிக்கின்றார்களோ, நேசித்துக் கொண்டிருக்கின்றார்களோ அந்த மக்களின் குரலாக நானிருப்பேன்.

தமிழ் தேசியத்தின் அரைநூற்றாண்டுக்கு  மேறப்பட்ட வலியை உணர்ந்து அனுபவித்தவன் என்ற வகையில் எதிர்கட்சி தலைவருக்குரிய கடமைகளையும் சேவைகளையும் நீண்ட காலமாகவே  நான் கிழக்கு மாகாண சபையிலிருந்து செயலாற்றி வருகின்றேன்.

பதவியில் இருந்து கொண்டுதான் சேவைகளையும், கடமைகளையும் செய்வேன் எனக்  கூறுபவன் நானல்ல.  கடந்த  காலத்தில் தமிழ் தேசியத்துக்காக எந்த அடிப்படையில்  எவ்வாறு  குரல் கொடுத்தேனோ அந்த வகையில் முழு மூச்சுடன் எனது குரல் ஒலிக்கும் என்பதை எனது மக்களுக்கு கூறிவைக்க விரும்புகின்றேன்.

எனவே நான் எதிர்கட்சி பொறுப்பை ஏற்காதது தொடர்பாக  நீங்கள்  அலட்டிக் கொள்ள  வேண்டிய அவசியமில்லை. நாம்  யாரென்பதை எமது  சேவைகளும்,  செயற்பாடுகளும் உணர்த்தும் மாறாக பதவிகளும், சலுகைகளும் அல்ல" என்றார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .