2026 ஏப்ரல் 10, வெள்ளிக்கிழமை

கிணற்றிலிருந்து யுவதியின் சடலம் மீட்பு

Suganthini Ratnam   / 2012 ஒக்டோபர் 05 , மு.ப. 04:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஜதுசன்,ஜவீந்திரா)

மட்டக்களப்பு, பாலையடிவட்டை பிரதேசத்திலுள்ள வயல் கிணறொன்றிலிருந்து 17 வயதுடைய யுவதியொருவர் நேற்று வியாழக்கிழமை மாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு, போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கோவில் போரதீவு கிராமத்தைச் சேர்ந்;த யுவதியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார்.

நேற்றுக்காலை தனது வீட்டிலிருந்து வயலுக்குச் சென்றுவருவதாக கூறிவிட்டு சென்ற இவர் வீடு திரும்பவில்லையெனவும் இந்நிலையில் இவரை தேடி வயலுக்குச் சென்று பார்த்தபோது இவர் கிணற்றில் சடலமாக காணப்பட்டதாகவும் உறவினர்கள் தெரிவித்தனர்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. 

இச்சம்பவம் தொடர்பான விசாரணையை களுவாஞ்சிக்குடி பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .