2026 ஏப்ரல் 24, வெள்ளிக்கிழமை

மலசலக்கூட குழியில் வீழ்ந்து சிறுமி பலி

Suganthini Ratnam   / 2012 டிசெம்பர் 02 , மு.ப. 07:10 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஸரீபா, ஏ.எச்.ஏ. ஹுஸைன்)


மலசலக்கூடத்திற்காக வெட்டப்பட்ட குழியில் வீழ்ந்து நான்கு வயதான சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார். அரபா நகர் கிராமத்தைச் சேர்ந்த முபீதா (வயது 4) என்ற சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள மீள்குடியேற்றக் கிராமமான அரபா நகர் கிராமத்திலேயே இன்று ஞாயிற்றுக்கிழமை 6.30 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இன்றையதினம் காலை தேநீர் தயாரித்துவிட்டு மகளைத் தேடியபோது அவரைக் காணவில்லை. இந்த நிலையில், வெளியில் சென்று எனது மகளை தேடினேன். அப்போது அவர் மலசலக்கூடத்திற்காக வெட்டப்பட்ட குழியில்  விழுந்து கிடப்பதை கண்டேன். மகளைத் தூக்கியபோது அவர் உயிரிழந்து காணப்பட்டதாகவும் தாயார் தெரிவித்தார்.

இது தொடர்பான விசாரணையை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .