2025 ஓகஸ்ட் 21, வியாழக்கிழமை

சுனாமி நினைவு நாளில் தந்தையை இழந்த மாணவர்களுக்கு நிதியுதவி

Menaka Mookandi   / 2012 டிசெம்பர் 26 , பி.ப. 01:44 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஏ.எச்.ஏ.ஹுஸைன்)


சுனாமி கடற்பேரலை தாக்கிய எட்டாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு இன்று புதன்கிழமை இலங்கை ஜமா அத்தே இஸ்லாமி சன்மார்க்க அமைப்பினால் தந்தையை இழந்த மாணவ மாணவியருக்கான பணக் கொடுப்பனவு வழங்கும் ஏறாவூல் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் ஆகக்குறைந்த தொகையாக ஆறாயிரத்து ஐந்நூறு ரூபாவும் ஆகக் கூடிய தொகையாக ஒருவருக்கு 28 ஆயிரம் ரூபாவும் என்ற விகிதத்தில் வழங்கப்பட்டது. ஏறாவூர் மற்றும் காத்தான்குடிப் பிரதேசங்களைச் சேர்ந்த 79 மாணவ மாணவிகள் இந்தக் கொடுப்பனவுகளைப் பெற்றுக் கொண்டனர்.

சுனாமிக்குப் பின்னரான இந்த உதவிக் கொடுப்பனவு ஒவ்வொரு வருடமும் காலாண்டுத் தவணைக் காலத்தில் வழங்கப் பட்டுவருவதோடு பணக் கொடுப்பனவுக்கு மேலதிகமாக சீருடைத் துணிகளும், குர்பானி இறைச்சியும், பாடசாலை உபகரணங்களும் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இலங்கை ஜமா அத்தே இஸ்லாமியின் ஏறாவூர் தாருல் ஈமான் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில் ஏறாவூர் மன்றப் பொறுப்பாளர் சகோதரர் எம்.எல்.ஏ.வாஜித் சமூக சேவைப் பகுதிப் பொறுப்பாளர் ஏ.எம்.றவூப் உட்பட இலங்கை ஜமா அத்தே இஸ்லாமியின் இன்னும் பல பணியாளர்களும் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X