2025 ஓகஸ்ட் 21, வியாழக்கிழமை

விசேட தேவையுள்ள சிறுவர்களுக்கான வந்தாறுமூலையில் பாடசாலை

Menaka Mookandi   / 2012 டிசெம்பர் 29 , மு.ப. 08:23 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ரி.லோஹித், ஜவீந்திரா)


விசேட தேவையுள்ள சிறுவர்களுக்கான பாடசாலையொன்று லண்டன் அகிலன் பவுன்டேசன் அமைச்சின் அனுசரணையுடன் மட்டக்களப்பு வந்தாறுமூலை பிரதேசத்தில் ஆரம்பிக்கப்பட்டது.

'அன்பகம் விசேட தேவையுடைய மாணவர்கள் பாடசாலை' என்ற பெயரில் திறந்துவைக்கப்பட்ட இப்பாடசாலையில் இப்பிரதேசத்தைச் சேர்ந்த சுமார் 27 விசேட தேவையுடைய மாணவர்கள் இணைக்கப்பட்டுள்ளனர்.

அன்பகம் தலைவர் டேவிட் சுதாகரன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா, லண்டன் அகிலன் பவுண்டேசன் ஸ்தாபர் கோபாலகிருஸ்ணன், மாகாண சபை உறுப்பினர்களான கி.துரைராஜசிங்கம், பிரசன்னா இந்திரகுமார் தமிழரசுக்கட்சியின் இளைஞர் அணியின் இணைத்தலைவர் சேயோன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது அன்பகம் விசேட தேவையுடைய மாணவர்கள் பாடசாலையின் பெயர்ப்பலகை திரைநீக்கம் செய்யப்பட்டதுடன் பாடசாலையும் திறந்து வைக்கப்பட்டதுடன், விசேட தேவையுள்ளவர்களுக்கான உதவிப் பொருட்களும் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X