2025 ஓகஸ்ட் 21, வியாழக்கிழமை

த.ம.வி.பு. கட்சியின் இவ்வாண்டின் இறுதிக் கூட்டம்

Suganthini Ratnam   / 2012 டிசெம்பர் 30 , மு.ப. 05:41 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சுக்ரி)


தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் இவ்வாண்டுக்கான இறுதிக் கூட்டம்  அக்கட்சியின் தலைவர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் தலைமையில் நேற்று சனிக்கிழமை நடைபெற்றது.

இவ்வாண்டில் கட்சி மேற்கொண்ட செயற்பாடுகள், புதிய உறுப்பினர்களை இணைத்துக்கொள்ளுதல்,  கட்சியின் எதிர்காலத்திட்டங்கள் ஆகியன தொடர்பில் இதன்போது  விரிவாக ஆராயப்பட்டன.

வாவிக்கரை வீதி 01, மட்டக்களப்பு என்னும் முகவரியிலுள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் பூ.பிரசாந்தன், பொருளாக்ளர் ஆ.தேவராஜா, உபதலைவர்  (ஒருங்கிணைப்பு) நா.திரவியம், உபதலைவர் (நிர்வாகம்) க.யோகவேள், உபசெயலாளர் ஜெ.ஜெயராஜ், அம்பாறை மாவட்ட அமைப்பாளர் சோ.புஸ்பராஜா, ஒருங்கிணைந்த நிறுவனங்களின் பணிப்பாளர் க.மோகன், மகளிர் அவிருத்தி இணைப்பாளர் திருமதி சந்திரா ஜவனராஜ், மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் எஸ்.ஆர்.மணிவண்ணன் மற்றும் தவிசாளர்கள் செயற்குழு உறுப்பினர்கள் உட்பட பிரதேசசபையின் உறுப்பினர்களும் கலந்து கொண்டார்கள்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X