2025 ஓகஸ்ட் 21, வியாழக்கிழமை

வாகன விபத்தில் ஒருவர் பலி

Suganthini Ratnam   / 2012 டிசெம்பர் 31 , மு.ப. 07:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஜவீந்திரா)

மட்டக்களப்பு, களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோட்டைக்கல்லாறு கிராமத்தில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளார்.

மோட்டார் சைக்கிளும் பிக் ரக வாகனமும் நேருக்குநேர் மோதியே இவ்விபத்து இடம்பெற்றதாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர். கல்முனையிலிருந்து மோட்டார் சைக்களில் வந்தவரே இவ்விபத்தில் பலியாகியுள்ளார். 

சடலம் பிரேத பரிசோதனைக்காக களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

இவ்விபத்து தொடர்பான விசாரணையை களுவாஞ்சிக்குடி பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X