2025 ஓகஸ்ட் 21, வியாழக்கிழமை

இயந்திரங்களை திருடிச்செல்ல முயன்றோருக்கு விளக்கமறியல்

Suganthini Ratnam   / 2013 ஜனவரி 04 , மு.ப. 07:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஸரீபா)

வாழைச்சேனை கடதாசி நிறுவனத்தில் இருந்து சட்டவிரோதமாக இயந்திரங்களை கொண்டு செல்வதற்கு மேற்கொண்ட நடவடிக்கை தொடர்பில் கைதுசெய்யப்பட்ட நான்கு சந்தேக நபர்களும் எதிர்வரும் 07ஆம் திகதிவரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 26ஆம் திகதி வாழைச்சேனை கடதாசி நிறுவனத்திற்கு  சொந்தமான பெருந்தொகையான இயந்திரங்களை சட்டவிரோதமாக கொழும்புக்கு எடுத்துச்செல்ல முற்பட்ட வேளையில் பிரதேச மக்கள் வழங்கிய தகவலின்படி வாழைச்சேனை பொலிஸார் நான்கு சந்தேக நபர்களை கைதுசெய்ததுடன், குறித்த வாகனம் மற்றும் மோட்டார்களையும் கைப்பற்றியுள்ளனர்.

இதற்கு இணங்க குறித்த சந்தேக நபர்களை வாழைச்சேனை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதற்கிணங்க கடந்த இரண்டாம் திகதிவரை விளக்கமறியலில் வைத்து விசாரனை முடியாத காரணத்தினால் இவர்களை மீண்டும் எதிர்வரும் 07ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பித்த நீதிபதி, இவ்விடயம் தொடர்பில் முழுமையான அறிக்கை ஒன்றினை நீதிமன்றத்திற்கு சமர்ப்பிக்குமாறு வாழைச்சேனை உதவிப் பொலிஸ் அத்தியட்சகருக்கு பணித்துள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X