2025 ஓகஸ்ட் 21, வியாழக்கிழமை

சுனாமி அனர்த்த பாதுகாப்பு ஒத்திகை

Kogilavani   / 2013 ஜனவரி 04 , மு.ப. 07:40 - 0     - {{hitsCtrl.values.hits}}


(சிஹாரா லத்தீப்)

மட்டக்களப்பு வாகரை பிரதேச செயலாளர் பிரிவின் பால்சேனைப் பகுதியில் சுனாமி மற்றும் வெள்ள அனர்த்தங்களின்போது மக்கள் தம்மை பாதுகாத்துக்கொள்ளும் வழிமுறைகள் குறிதத்தான சுனாமி ஒத்திகை செயன்முறையொன்று நேற்று வியாழக்கிழமை நடாத்தப்பட்டது.

அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் ஏற்பாட்டில், மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் மட்டக்களப்பு உதவிப் பணிப்பாளர் சண்முகநாதன் இன்பராஜனின் மேற்பார்வையில் இவ் ஒத்திகை இடம்பெற்றது.

பிற்பகல் 03.00 மணியளவில் சுனாமி அனர்த்த அபாய ஒலி எழுப்பப்பட்டு இக்கிராம மக்கள் பால்சேனை அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் பாதுகாப்பாக ஒன்று சேர்க்கப்பட்டனர்.

பின்னர், வெள்ள அனர்த்தங்களில் மக்கள் தம்மை இலகுவாக பாதுகாத்துக்கொள்வதற்கு கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து விளக்கப்பட்டது.

இந்த ஒத்திகை நிகழ்வினை நடைமுறைப்படுத்தும் பணிகளில் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் மட்டக்களப்பு அலுவலக உதவி இணைப்பாளர்களான ஏ.கஷீர், ஏ.சி.அல்தாப் மற்றும் படை அதிகாரிகள் ஈடுபட்டனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X