2025 ஓகஸ்ட் 21, வியாழக்கிழமை

ஹசன் மௌலவி வைத்தியசாலையில்

Super User   / 2013 ஜனவரி 10 , மு.ப. 08:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-றிப்தி அலி

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கிழக்கு மாகாண சபை உறுப்பினரான ஹசன் மௌலவி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்தியாவிலுள்ள அப்பலோ வைத்தியசாலையிலேயே கிண்ணியா ஹசன் மௌலவி அனுமதிக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினரான எம்.எஸ்.சுபையிர் தமிழ்மிரர் இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.

இதேவேளை, கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளர் முன்னாள் அமைச்சர் அமீர் அலி மற்றும் தேசிய கொள்கை பரப்பு செயலாளர் எம்.எஸ்.சுபையிர் ஆகியோரின் ஏற்பாட்டில் ஹசன் மௌலவி தேக ஆரோக்கியத்திற்காக துஆ பிரார்த்தனையொன்று இடம்பெற்றுள்ளது.

ஏறாவூர், பைசானுல் மதீனா அரபு கல்லூரியில் நேற்று புதன்கிழமை இந்த துஆ பிரார்த்தனை இடம்பெற்றுள்ளது.

அத்துடன் கிழக்கு மாகணத்தின் தலைசிறந்த உலமாவும் அரசியல்வாதியுமான ஹசன் மௌலவியின் தேக ஆரோக்கியத்திற்காக துஆ பிரார்த்தனையில் ஈடுபடுமாறு கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான அமீர் அலி மற்றும் எம்.எஸ்.சுபையிர் ஆகியோர் கோரிக்கைவிடுத்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X