2025 ஓகஸ்ட் 21, வியாழக்கிழமை

வெள்ளநீர் வடிந்தோடக்கூடிய நடவடிக்கைகளை விரைவாக எடுக்குமாறும் பணிப்பு

Kogilavani   / 2013 ஜனவரி 11 , மு.ப. 11:13 - 0     - {{hitsCtrl.values.hits}}


- சிஹாரா லத்தீப்


ஏறாவூர் நகர பிரதேச செயலகப் பிரிவில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கினை கட்டுப்படுத்தவும் வெள்ளநீர் வடிந்தோடக்கூடிய நடவடிக்கைகளை விரைவாக எடுக்குமாறும் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. பி.எஸ்.எம். சார்ள்ஸ் பணிப்புரை விடுத்துள்ளார்.

இப்பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள அனர்த்தத்தின் பாதிப்புக்களை நேரில் கண்டறிவதற்காக இப்பகுதிக்கு திடீர் விஜயம் மேற்கொண்ட அரசாங்க அதிபர் ஸ்தளத்தில் வைத்து ஏறாவூர் நகர பிரதேச செயலாளர் யு.எல்.எம் ஹனிபாவிற்கு இந்த பணிபுரையை விடுத்துள்ளார்.

இடம்பெயர்ந்துள்ள மக்களுக்காக நிவாரணப் பணிகளை துரிதப்படுத்துமாறும் தொற்றுநோய்கள் பரவாதிருக்கக்கூடியவாறு வெள்ளநீர் நிரம்பியுள்ள பகுதிகளில் தொடர்ந்தும் வசித்து வரும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் பிரதேச செயலாளருக்கு இதன்போது ஆலோசனை வழங்கியுள்ளார்.

இதன்போது கிழக்கு மாகாண சபையின் பிரதி அவைத் தலைவர் எம்.எச்.சுபைர், ஏறாவூர் நகரசபை தவிசாளர் அலிஸாஹிர் மௌலானாவும் இணைந்து கொண்டு பாதிக்கப்பட்ட பகுதிகளின் நிலைமைகள் பற்றி அரச அதிபருக்கு எடுத்துரைத்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இப்பிரதேசத்தில் மழை காலங்களில் வெள்ளநீர் தேங்கி நிற்பதை தடுப்பதற்கென மட்டக்களப்பு மாவட்ட வடிகான்கள் அமைக்கும் விசேட திட்டம் அரசினால் அங்கீகரிக்கப்பட்டிருப்பதாகவும் இதனை அமுல்படுத்துவதற்கு பிரதேச மக்களின் ஒத்துழைப்பை தமக்கு பெற்றுத்தர வேண்டும் என்று மாகாண பிரதி அவைத் தலைவரிடமும் நகரசபை தவிசாளரிடமும் இவ்விஜயத்தின்போது அரச அதிபர் கேட்டுக்கொண்டதாக மாவட்டச் செயலக ஊடக அறிக்கை தெரிவிக்கின்றது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X