2025 ஓகஸ்ட் 21, வியாழக்கிழமை

நுளம்பு வலைகள் வழங்கி வைப்பு

Kogilavani   / 2013 ஜனவரி 15 , மு.ப. 10:45 - 0     - {{hitsCtrl.values.hits}}


- ஜவீந்திரா


மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவின் கீழுள்ள களுமுந்தன்வெளி கிராம மக்களுக்கு இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்பு கிளையினால் நுளம்பு வலைகள் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை வழங்கி வைக்கப்பட்டன.

அக்கிராம மக்கள்  இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் போரதீவுப்பற்று பிரிவிடம் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க இந்நுளம்பு வலைகள்  40 பேருக்கு பகிர்ந்தளிக்கப்பட்டன.

அண்மையில் பெய்த கடும் மழை மற்றும் வெள்ளம் காரணமாக இக்கிராமம் பதிப்புற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X