2026 ஏப்ரல் 26, ஞாயிற்றுக்கிழமை

பாலம் சேதமடைந்ததால் மக்கள் அசௌகரியம்

Kogilavani   / 2013 ஜனவரி 19 , மு.ப. 08:46 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஜவீந்திரா


மாதுறு ஓயா கிளையாறினை ஊடறுத்து போடப்பட்டுள்ள பாலம் அண்மையில் எற்பட்ட மழை, வெள்ளப் பெருக்கினால் சேதமடைந்துள்ளதனால் இப்பாலத்தினுடனான போக்குவரத்து முற்றாகத் தடைப்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் வடமுனை, கள்ளிச்சேனை, ஊத்துச்சேனை, மியாங்கல, தரவைக்குளம் போன்ற பல கிராமங்களுக்குச் செல்லும் இப்பிரதான வீதியினை ஊடறுத்துப்பாயும் மாதுறு ஓயா ஆற்றிற்குக் குறுக்காக இடப்பட்டுள்ள பாலம், அண்மையில் ஏற்பட்ட மழை வெள்ளத்தினால் சேதடைந்துள்ளதினால் இப்பாலத்தினை ஊடறுத்து வாகனங்கள் செல்லமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் இக்கிராமங்களுக்கான போரூந்து சேவையும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் இதனால் தாம் கால்நடையாக பல மைல்களுக்கு அப்பால் நடந்து வெல்ல வேண்டிய துர்பாக்கிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்தாகவும் அப்பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

மட்டக்களப்பு மாவட்டத்திற்கும் பொலநறுவை மாவட்டத்திற்கும் எல்லையில் இப்பாலம் அமைந்துள்ளதினால் இப்பாலத்தினைப் பயன்படுத்திவரும் ஆயிரக்கணக்கான மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மிகவிரைவில் சேதமடைந்து கிடக்கும் இப்பாலத்தனை சீர் செய்து தரவேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .