2026 ஏப்ரல் 26, ஞாயிற்றுக்கிழமை

வறுமையற்றதோர் இலங்கையைக் கட்டியெழுப்புதல் அறிவூட்டும் நிகழ்ச்சி

Menaka Mookandi   / 2013 ஜனவரி 19 , மு.ப. 09:50 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ.ஹுஸைன், சிஹாறா லத்திப்

வறுமையற்றதோர் இலங்கையைக் கட்டியெழுப்புதல் எனும் இலக்கினை அடைந்து கொள்வதற்காக வாழ்வின் எழுச்சி எனும் திவிநெகும வேலைத்திட்டத்தை மேலும் பயனுள்ளதாக நடைமுறைப்படுத்தும் பொருட்டு பிரிதேச செயலக மட்டத்தில் அதிகாரிகளுக்கும் பொதுமக்களுக்கும் அறிவூட்டும் நிகழ்ச்சி ஏறாவூர் நகர பிரதேச செயலகப் பிரிவில் இன்று சனிக்கிழமை காலை துவங்கியது.

பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புத் தலைவரும் வர்த்தக கூட்டுறவுப் பிரதியமைச்சருமான பஷீர் சேகுதாவூத் தலைமையில் பிரதேச செயலாளர் எஸ்.எல்.முஹம்மத் ஹனீபா வின் வழிகாட்டலில் இந்த விழிப்புணர்வுக் கருத்தரங்கு இடம்பெற்றது.

நிகழ்வில் கிழக்கு மாகாண சபையின் பிரதித் தவிசாளர் எம்.எஸ்.சுபைர், ஏறாவூர் நகர பிதா அலிஸாஹிர் மௌலானா உட்பட பல திணைக்களங்களின் தலைவர்களும் அதிகாரிகளும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .