2026 ஏப்ரல் 26, ஞாயிற்றுக்கிழமை

வாழைச்சேனை பொலிஸாரின் நடமாடும் சேவை

A.P.Mathan   / 2013 ஜனவரி 19 , பி.ப. 05:22 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஸரீபா


எஸ்கோ நிறுவனத்தின் அனுசரணையில் ஆசிய அமைப்பின் நிதி உதவியில் வாழைச்சேனை பொலிஸாரினால் ஏற்பாடு செய்யப்பட்ட நடமாடும் சேவை இன்று சனிக்கிழமை புதுக்குடியிருப்பு வாணி வித்தியாலயத்தில் இடம்பெற்றது.

வாழைச்சேனை பொலிஸ் நிலைய சமுக பொலிஸ் பொறுப்பதிகாரி யூ.எல்.இமானுல்லாஹ் தலைமையில் இடம்பெற்ற இந் நடமாடும் சேவையில் கோறளைப்பற்று பிரதேச செயலகப் பிரிவில் உள்ள 12 கிராம சேவகர் பிரிவைச் சேர்ந்த மக்கள் வந்து தங்களது தேவைகளைப் பெற்றுக் கொண்டனர்.

இங்கு பொலிஸ் முறைப்பாட்டு பிரதி வழங்கல், இணக்கசபை விசாரணைகள், மோட்டார் போக்குவரத்து பொலிஸாரினால் போக்குவரத்துத் தொடர்பான விளக்கமளித்தல், பிரதேச செயலகத்தினால் பிறப்பு, இறப்பு, திருமணப் பதிவுகளுக்கான விண்ணப்பங்கள் மற்றும் அடையாள அட்டைக்கான விண்ணப்பங்கள் என்பன ஏற்றுக்கொள்ளப்பட்டன.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .