2026 ஏப்ரல் 26, ஞாயிற்றுக்கிழமை

மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிக விளைச்சல் தந்த சோளம்

A.P.Mathan   / 2013 ஜனவரி 19 , பி.ப. 05:33 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஜவீந்திரா


மட்டக்களப்பு மாவட்டத்தில் இவ்வருடம் சோளப்பயிர்ச் செய்கை தமக்கு அதிக விளைச்சலைத் தந்துள்ளதாக சோளம் செய்கையில் ஈடுபட்ட விவசாயிகள் கூறுகின்றனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் படுவான்கரைப் பகுதியான வெல்லாவெளி, பட்டிப்பளை, வவுணதீவு போன்ற பல பிரதேசங்களில் சோளம் செய்கையினை விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

அந்தவகையில் போரதீவுப்பற்று பிரதேசத்தில் இம்முறை மேட்டுநிலப் பயிர் செய்கையாக செய்கை பண்ணப்படுகின்ற சோளம் பயிர் செய்கை தமக்கு எதிர்பார்த்த இலாபத்தினை ஈட்டித் தந்துள்ளதாக இப்பயிர் செய்கையில் ஈடுபட்டுவரும் விவசாயிகள் கூறுகின்றனர்.

போரதீவுப் பற்று பிரதேசத்திற்குட்பட்ட வைக்கியல்ல, பாலையடிவட்டை, நவகிரிநகர் போன்ற பல கிராமங்களிலுள்ள பெரும்பாலான விவசாயிகள் இம்முறை சேனைப்பயிர் செய்கையாக அதிகளவன நிலப்பரப்பில் சோளம் பயிரிட்டுள்ளனர்.

தாம் சில்லறையாகவும் மொத்தமாகவும் இவற்றினை விற்பனை செய்J வருவதாகவும் அப்பகுதி விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .