2026 ஏப்ரல் 26, ஞாயிற்றுக்கிழமை

ஏறாவூர் நகர சபையில் ரிசானாவுக்கு அனுதாப பிரேரணை

Super User   / 2013 ஜனவரி 22 , மு.ப. 10:32 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ. ஹுஸைன்


சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்ட ரிசானாவுக்கு ஏறாவூர் நகர சபையில் இன்று செவ்வாய்க்கிழமை அனுதாப பிரேரணையொன்று நிறைவேற்றப்பட்டது.

ஏறாவூர் நகர சபையின் மாதந்த கூட்டம் இன்று நகர சபை மண்டபத்தில் நகர பிதா அலிஸாஹிர் மௌலானா தலைமையில் இடம்பெற்றது.

இதன்போதே இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இங்கு கருத்து தெரிவித்த ஏறாவூர் நகர பிதா அலிஸாஹிர் மௌலானா,

"கருணை காருண்யம் எல்லாம் நம்மிடம் உண்டு. இதையெல்லாம் மீறி ரிசானாவுக்கு நடந்த அநீதிகளை இந்த நகர சபை வன்மையாக கண்டிக்கின்றது.

ரிசானாவின் குடும்பத்தினருக்கும் அந்தச் சிறுமியின் விடுதலைக்காக பாடுபட்டவர்களுக்கும் நாம் எமது முழுமையான ஆதரவைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

இதேவேளை எம்மை விட்டுப் பிரிந்த அந்த சகோதரிக்கு எல்லாம் வல்ல இறைவன் மேலான சொர்க்கலோக வாழ்வை அருள வேண்டும் என்றும் பிரார்த்திக்கின்றோம்" என்றார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .