2026 மே 01, வெள்ளிக்கிழமை

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை அரசாங்க அதிபர் சந்திப்பு

Menaka Mookandi   / 2013 ஜனவரி 27 , மு.ப. 08:31 - 0     - {{hitsCtrl.values.hits}}


-கே.எஸ்.வதனகுமார்


மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளத்தினால் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட ஏறாவூர்ப் பற்றுப் பிரதேச மக்களை மட்டக்களப்ப அரசாங்க அதிபர் பதிருமதி பீ.எஸ்.எம்.சாள்ஸ் ஏறாவூர் பற்றுப் பிரதேச செயலாளர் உ.உதயசிறி மற்றும் அனர்த்த முகாமைத்துவ நிலைய அதிகாரிகள் சகிதம் சென்று இன்று சென்று பார்வையிட்டார்.

இவ்வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட இப்பிரதேசத்தைச் சேர்ந்த பல்லாயிரக் கணக்கான மக்கள் பாடசாலைகளிலும் பொது இடங்களிலும் தங்கியுள்ளனர்.

இந்நிலையில் இடம்பெயர்ந்த சித்தாண்டி மகாவித்தியாலயம், வந்தாறுமூலை கணேசா வித்தியாலயம்,காணாங்குடா கண்ணகி வித்தியாலயம் ஆகிண பாடசாலைகளில் தங்கியிருக்கும் மக்களைச் சந்தித்த அரசாங்க அதிபர் அவர்களது குறைகளைக் கேட்டறிந்தார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .