2026 மே 01, வெள்ளிக்கிழமை

எல்லை விவகாரம் ஜனாதிபதிக்கு அறிக்கை சமர்ப்பிக்க தமிழ்க் கட்சிகள் தீவிரம்

Super User   / 2013 பெப்ரவரி 04 , மு.ப. 08:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரி.லோஹித்

மட்டக்களப்பு மாவட்டத்தில் இரண்டு பிரதேச செயலகப் பிரிவுகளின் எல்லைகள் மாற்றப்படுதல் தொடர்பான அறிவித்தல் வந்ததையடுத்து ஏற்பட்ட குழப்பத்திற்கு தீர்வு காணும் வகையில் ஜனாதிபதிக்கு அறிக்கை சமர்ப்பிக்கும் திட்டம் ஒன்றைத் தயாரிக்கும் வேலைகளில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் அரசியல் கட்சி உறுப்பினர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இது தொர்ர்பான இறுதிக்கட்ட தீர்மானம் எடுக்கும் வேலைகள் தொடர்பில்; மட்டக்களப்பு தமிழரசுக்க ட்சி அலுவலகத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் நேற்று முன்தினம் ஆராய்ந்துள்ளனர். இவ்விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

மட்டக்களப்பின் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான பொன் செல்வராசா, பி.அரியநேத்திரன், சி.யோகேஸ்வரன், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் முன்னாள் முதலமைச்சரும் தற்போதைய மாகாண சபை உறுப்பினரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான சி.சந்திரகாந்தன், மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு மாகாண சபை உறுப்பினர்கள், ஜனாதிபதியின் ஆலோசகரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளருமான அருண் தம்பிமுத்து மற்றும் சிவில் பிரதிநிதிகளும் இணைந்து ஜனாதிபதிக்கு வழங்கிவைப்பதற்காக அறிக்கை ஒன்றைத் தயாரித்து வருகின்றனர்.

இவர்கள் தமது அறிக்கையினை விரைவில் சமர்ப்பிக்கவுள்ளதாகவும் மட்டக்களப்பு மாவட்ட அரசியல் வட்டாரங்களிலிருந்து தெரிய வருகின்றது. இருப்பினும், கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில், ஏற்கனவே இருந்த எல்லைகளின் படியே எல்லைகள் இருக்கும் எனத் தெரிகிறது.

மட்டக்களப்பு மாவட்டத்தின், வாகரை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள புணாணை கிழக்கு எனும் 211பி கிராம சேவையாளர் பிரிவின் ரிதிதென்ன, ஜயந்தியாய, ஓமடியாமடு, பாலம்பக்கேணி, ஆலங்குளம், புவனேசபுரம், மேலாண்டகுளம் ஆகியன கோரளைப்பற்று மத்;தியுடன் இணைக்கப்படுகிறது. இதில் சுமார் 12,500க்கும் அதிகமான ஏக்கர் நிலப்பரப்பு உள்வாங்கப்படுகிறது.

அதேபோன்று, கிரான் பிரதேச செயலாளர் பிரிவின் வாகனேரி எனும் 610 குடும்பங்களைக் கொண்ட 210ஆம் இலக்க கிராம சேவையாளர் பிரிவின் குளத்துமடு, குடாமுனைக்கல், குளவால்சேனை, பெட்டைக்குளம், புணானை மேற்கு 240 குடும்பங்களைக் கொண்ட  210 ஈ கிராம சேவையாளர் பிரிவின் புணானை, மயிலந்தனை, சாளம்பைச்சேனை, முள்ளிவட்டவான், புணானை அணைக்கட்டு ஆகிய கிராமங்கள் கோரளைப்பற்று மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுடனும் இணைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதிலும் சுமார் 11,000 ஏக்கர் நிலப்பரப்பு உள்வாங்கப்படுகிறது என ஜனவரி மாதம் பொங்கல் தினத்துக்கு முதல் நாள் பொது நிர்வாக அமைச்சின் மேலதிக செயலாளர் டலகேயினால் அறிவிக்கப்பட்டிருந்தது.இந்த நடவடிக்கையினை தமிழ் மக்களது பிரதேசங்கள் முஸ்லிம் மக்களது பிரிவுகளுடன் இணைந்திருப்பதற்கு தமிழ் மக்கள் விரும்பமாட்டார்கள்.

மட்டக்களப்பில் தமிழ், முஸ்லிம் மக்களிடையே பிளவை ஏற்படுத்துவதற்காக மத்திய அரசின் திட்டமிட்ட செயற்பாடாக இது அமைந்திருக்கிறது.  அந்த வகையில் இத்திட்டத்திற்கு யாரும் விலை போய்விடக்கூடாது என தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்து பொது நிருவாக அமைச்சுக்கு கடிதத்தினை அனுப்பியது அத்துடன், இந்த எல்லை நிர்ணயத்தினை மீள் பரிசீலனை செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இதனையடுத்து பொது நிருவாக அமைச்சர் நாடாளுமன்றக் கட்டத் தொகுதியில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ், முஸ்லிம் அரசியல்வாதிகளைச் சந்தித்துக் கலந்துரையாடினர்.ஆனாலும் அதன் போது தீர்வு எட்டப்படாத நிலையில் ஜனாதிபதியின் தீர்மானத்துக்கு இவ்விவகாரம் சென்றிருக்கிறது.

  Comments - 0

  • Mohammed Hiraz Monday, 04 February 2013 09:01 AM

    மட்டக்களப்பு மாவட்டத்தில் முஸ்லிம்கள் 30 வீதம் இருக்கின்றனர். அவர்களுக்கு அந்த மாவட்டதின் 30 வீதமான அரசகாணிகளை நிர்வகிக்கவும் அனுபவிக்கவும் சகல உரிமையும் இருக்கிறது. முன்னர் முஸ்லிம் பிரதேச செயலகங்களுடன் இணைந்திருந்த நிலப்பரப்பு திட்டமிட்டு புதிதாக உருவாக்கபட்ட கிரான் பிரதேச செயலகத்துடன் இணைக்கபட்டதாலேயே அந்த நிலத்தில் வாழும் ஒட்டுமொத்த மக்களும் மீண்டும் தங்களை முஸ்லிம் பிரதேச செயலகத்துடன் இணைக்க கோறி நிட்கின்றனர் கிராமத்து மக்களின் நியாயமான கோரிக்கைக்கு அமைய அவர்கள் விரும்பும் நிர்வாகத்துக்கு கீழ் அவர்களின் காணிகள் நிர்வகிக்கப்படுவதே சிறந்த தீர்வு இந்த சுதந்திர நாளிலாவது மட்டக்களப்பு முஸ்லிம்களுக்கு 30 வீதமான அரச காணிகளை அனுபவிக்கும் வாய்பை ஏட்படுத்தி கொடுப்பது அரசின் பொறுப்பாகும் இனவாடஹிட்கு அரசு தலை வ்ணங்க கூடாது???

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .