2026 மே 01, வெள்ளிக்கிழமை

மாவடியோடை பாலம் சேதம் போக்குவரத்து ஸ்தம்பிதம்

Menaka Mookandi   / 2013 பெப்ரவரி 04 , பி.ப. 02:13 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.சுக்ரி


மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தின் காரணமாகவும், குளங்கள் திறக்கட்டமையால்  செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மாவடியோடை பாலத்தின் இருபக்கங்களும் முற்றாக உடைப்புக்கு உள்ளான நிலையில் அப்பாலத்தினூடாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால், அப்பாலத்தினூடாகச் சென்று தங்களது விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடும் விவசாயம் செய்யும் விவசாயிகள் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இப்பாதை ஒன்றே அதற்கான தற்போதைய வழியாக உள்ள நிலையில் கமம் செய்வோர் சூடு அடித்து விளைவை பெற்றுவர முடியாத நிலை உருவாகி உள்ளது. இது மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகளை பெரிதும் பாதித்துள்ளது என்று பாதிக்கப்பட்ட விவசாயிகள் சிலர் தெரிவித்தனர்.

இவ்விடயமாக மக்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், அரச அதிகாரிகள், பிரதேச சபை உட்பட பலருக்கும் அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், இதுவரையில் எவ்வித நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவில்லை என்று அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

இவ்வேளை இப்பாலம் திருத்தப்படாமல் தமது கமம் முற்றாக பாதிக்கப்படுவதை இட்டு கவலையடைந்த கமநல அமைப்புக்கள், விவசாயதிட்ட முகாமைத்துவ குழுவினர்கள் இதனை புனரமைப்பதில் ஈடுபடுகின்றனர்.

இவ்வேளை இப்பாலத்தின் பாதிப்பை பார்வையிடுவதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன், கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கி.துரைராசசிங்கம் ஆகியோர் நேற்று விஜயம் செய்து பார்வையிட்டதுடன், விவசாய திட்ட முகாமைத்துவ குழு உறுப்பினர்களுடன் கலந்துரையாடியமை குறிப்பிடத்தக்கது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .