2026 மே 01, வெள்ளிக்கிழமை

ஏறாவூர் ஷாஹிர் மௌலான வித்தியால ஆசிரியர்கள் சுகயீன விடுமுறை போராட்டம்

Kanagaraj   / 2013 பெப்ரவரி 06 , பி.ப. 01:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-லோஹித்

மட்டக்களப்பு மத்தி. கல்வி வலயத்துக்குட்பட்ட ஏறாவூர் ஷாஹிர் மௌலான வித்தியாலயத்துக்கு அதிபர் தரத்திலான நிரந்தர அதிபர் ஒருவரை நியமிக்குமாறு கோரி, அப்பாடசாலையின் ஆசிரியர்கள் நேற்றைய தினம் சுகயீன விடுமுறைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அத்துடன், பாடசாலையிலிருந்து இடமாற்றப்பட்டுள்ள இரண்டு ஆசிரியர்களின் இடமாற்றத்தை ரத்துச் செய்ய வேண்டும் என்றும் போராட்டத்தில் அவர்கள் இதன்போது வலியுறுத்தினர்.

மேற்படி பாடசாலையில் 17 ஆசிரியர்கள் கடமையாற்றுகின்ற போதிலும் 3 ஆசிரியர்கள் மாத்திரமே நேற்றைய தினம் கடமைக்கு சமூகமளித்திருந்தனர்.

இந்த பிரச்சினை தொடர்பாக ஆராய்வதற்கென மட்டக்களப்பு மத்தி வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ.எம்.அகமட் லெப்பை உள்ளிட்ட அதிகாரிகள் பாடசாலைக்கு விஜயம் செய்து நிலைமையை ஆராய்ந்துள்ளனர்.

ஆசிரியர்களின் விடுமுறை காரணமாக பதில் கடமையாற்றுவதற்காக பட்டதாரி பயிலுநர்கள் மற்றும் வலயத்திலுள்ள ஏனைய பாடசாலைகளிலிருந்து மேலதிகமாக உள்ள ஆசிரியர்கள் உடனடியாக அழைக்கப்பட்டு கற்பித்தல் நடவடிக்கைகள் சுமூகமாக இடம்பெற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ.எம்.அகமட் லெப்பை கூறினார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .